மின்சாரத்தை அவதானமாக பயன்படுத்தமாறு மின்சக்தி அமைச்சு கோரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை காரணமாக, மின்சாரத்தை அவதானமாக பயன்படுத்தமாறு மின்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மழைவீழ்ச்சி குறைவடைந்து, வரட்சியான காலநிலை நிலவுகின்றமையால், மின்சாரத்தை வீண் விரயம் செய்வதைத் தவிர்த்து, மிக அவதானத்துடன் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்
இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக தற்போது ஏற்பட்டுள்ள சவாலை வெற்றிகொள்வதற்கு உரிய ஒத்துழைப்பை வழங்குமாறும் மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

Post a Comment