நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் சில அடுத்த வாரம் திறப்பு.
சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களை சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் அறிவித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் அனைத்து பீடங்களுக்கும் முதலாம் ஆண்டு முதலாம் அரையாண்டு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்குரிய கல்விசார் நடவடிக்கைகள் எதிர்வரும் 22ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக வளாக முதல்வர் வீ. கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.
Post a Comment