அனைத்து ஜூம்ஆ உரைகளின் ஒலிப்பதிவுகளை அமைச்சுக்கு அனுப்புமாறு ஹலீம் வலியுறுத்தல்.
நம்பிக்கைபொறுப்பாளர்கள் தமது மஸ்ஜித்களில் இடம்பெறும் அனைத்து ஜூம்ஆ உரைகள் மற்றும் ஏனைய உரைகளையும் ஒலிப்பதிவு செய்து அவற்றை முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று
முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் அறிக்கையூடாக இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்விதத்திலுமான வெறுப்பூட்டும் அல்லது தீவிரவாதமிக்க கருத்துக்களை ஊக்கப்படுத்துவதற்கோ, பரப்புவதற்கோ எவருக்கும் இடமளிக்கக்கூடாது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment