ஐ.எஸ்.ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கு எதிராக இலங்கை முஸ்லிம்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேணடியும் மற்றும் காயமடைந்தோர்கள் சுகநலம் வேண்டியும் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் தூஆ பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு பெரியமுல்ல பள்ளிவாசலிலும் கொழும்பு வீதியில் உள்ள பெரிய முல்லை சந்தியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகிலும் இன்று ஜும்ஆ தொழுகையின முஸ்லிம்கள் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளையும் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பையும் தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment