கொரோனா தொற்றுக்குள்ளான 20 பேர் தொடர்பில் வெளியான செய்தி.

நாட்டில் மேலும் 20 பேருக்கு நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக தொற்றுறுதியானவர்களில் 9 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேரும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும் அதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கட்டாரில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்றுதியானவருடன் தொடர்பை பேணிய 4 பேருக்கும் நேற்று கொவிட் 19 தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 12 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் 678 கொவிட் 19 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget