ஹஜ்ஜுப் பெருநாள் தொடர்பில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஒர் நற்செய்தி.


எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (21) இடம்பெற்ற துல்ஹஜ் மாதத்திற்கான தலைப் பிறை மாநாட்டின்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

துல்கஃதா மாதம் பிறை 29ஆம் தினமான இன்று (21), இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்டின் துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இலங்கையின் எப்பகுதியிலும் தென்படாததன் காரணமாக, துல்கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து, நாளை மறுதினம் துல்ஹஜ் மாதத்தின் முதலாம் நாளாக கொள்ளப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அதற்கமைய துல்ஹஜ் பிறை 10 ஆம் திகதியான, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினமாக அனுஷ்டிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

தலைப் பிறை தீர்மானிக்கும் இன்றைய மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget