டெல்லியில் 5000 பெண்களை வைத்து விபச்சாரம் செய்த கணவன், மனைவி ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள ஜி.பி. சாலையில் சிவப்பு விளக்கு பகுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள விபச்சாரத் தொழிலை டெல்லி குற்றப்பிரிவு பொலிசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியின் பெரும்பாலான இடங்களில் உசைன் மற்றும் சாய்ராபேகம் என்ற தம்பதியினர் விபச்சார விடுதிகளை இயக்கி வருவதாக பொலிசாருக்கு தெரியவந்தது.
இதிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து இளம்பெண்களை கடத்தி வந்து வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதும் தெரியவந்தது.
இதன் காரணமாக பொலிசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சாய்ராபேகம் விபச்சார அழகியாக இருந்து, அதன் பின் அவ்விடுதிக்கு உரிமையாளர் ஆகியுள்ளார்.
மேலும் அவர்கள் மற்ற மாநிலங்களிலிருந்து சிறுமிகளை 1 லட்சம் மற்றும் 2 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, அவர்களை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். இதில் அவர்கள் 5000க்கும் மேற்பட்ட பெண்களை ஈடுபடுத்தியுள்ளனர் என தெரியவந்தது.
இதன் மூலம் அவர்கள் கோடிக்கணக்கில் சொத்துக்கள் குவித்துள்ளனர். பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்களும் வாங்கியுள்ளனர்.
மேலும் இதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு முக்கிய குற்றவாளி தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது அமைப்புரீதியான குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment
Thanks, Malcolm. Do you happen to know the hourly rate for a good juggler? I’m quite prcieofint with three balls and not bad with four. Seriously, though, you have a good point.