மைத்திரியின் அதிரடி நடவடிக்கையால் மகிந்தவின் எதிரணிக்குள் மோதல்கள்; உளவாளிகள் இருப்பதாக சந்தேகம்



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிர்க்கட்சிக்குள் உள்ளக மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


பொது எதிர்க்கட்சிக்குள் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவின் புலனாய்வாளர் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.



பொது எதிர்க்கட்சியின் பாத யாத்திரையை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சிக்கும் ஒருவருமாக மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளார்.


எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து அவரை நீக்காமல் ஜனாதிபதியை பெரிதாக விமர்சிக்காத 10 பேரை அமைப்பாளர் பதவியிலிருந்து ஜனாதிபதி நீக்கியதைத் தொடர்ந்து இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.



அத்துடன் மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்பில் குற்ற விசாரணப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளில் அவர் அரசாங்க சொத்துகளை தவறாக பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ள நிலையில், அதற்கான அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ளன. எனினும் இது தொடர்பில் வழக்கு தொடராமல் உள்ளமையும் இந்த சந்தேகத்திற்கு காரணமாகியுள்ளது.



மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக செயற்பட்ட காலத்தில் கொள்வனவு செய்த அசையும், அசையா சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த கோடிக் கணக்கிலான பணம் சம்பாதிக்கப்பட்ட  முறையினை நிரூபிக்கத் தவறியுள்ளார்.


இது தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினரால் பணம் தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சட்ட மா அதிபரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



அத்துடன் அவர் விளையாட்டுத் துறை அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் எவ்வித கேள்விப்பத்திர நடைமுறையும் இன்றி 40 அரசாங்க திட்டங்களை அவரது நண்பர்கள் இருவருக்கு வழங்கியமை தொடர்பிலும் மஹிந்தானந்தவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



எப்படியிருப்பினும் இவ்வாறு சொத்து சேகரித்த முறையினை வெளியிடத் தவறிய நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக மாத்திரம் அல்ல முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரதானி மற்றும் இலங்கை இராணுவத்தின் மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக அரசாங்கம் தற்போது வரை வழக்குத் தாக்கல் செய்துள்ளது.



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவதனை தவிர்ப்பதற்காக மஹிந்தானந்த உட்பட்ட குழுவினர் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் சிலருடன் கடந்த சில மாதங்களாக கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக பொது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.



மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்பில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.



இவ்வாறு முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான 10 உறுப்பினர்களை தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து நீக்கிவிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் தொடர்பில் விமர்சிக்கும் மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்தன, குமார வெல்கம, ரமேஷ் பத்திரன, மொஹான் டி சில்வா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விதுர விக்ரமநாயக்க, ரஞ்சித் சொய்ஸா, ஜனக வக்கும்பர, லொஹான் ரத்வத்தே போன்ற ராஜபக்ஷகளுக்கு  நெருக்கமான உறுப்பினர்களை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்காமை பொது எதிர்க்கட்சி பிளவடைந்துள்ளது என்பதனை காட்டுவதற்காக என அவர்கள் தெரிவித்துள்ளனர்.



எப்படியிருப்பினும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத தொகுதி அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளிலிருந்து நீக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்


http://www.thinakkural.lk

Post a Comment

AufLunmeafitfy you dont paint to the clearcoat until 3 hourss,you may have smuged them befor you painted clear coat oon to them,its just a mistake next time wait 3 hours atleast.

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget