லண்டன், பார்சன் கிறீன் நிலக்கீழ் ரயிலில் வெடிப்புச் சம்பவம் அச்சமடைந்த பயணிகள் சிலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று காலை 8.20 அளவில் இடம்பெற்றது.
ரயிலின் உள்ளே இருந்த பை ஒன்றில் தீ பரவியதாக சமூக வலைத்தளச் செய்தி ஒன்று ஒளிப்படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. இதனால் அச்சமுற்று கூக்குரலோடு தப்பிக்க முயன்ற பயணிகளால் மட்டுமே சிலர் காயமுற்றதாக பிந்திகிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தீ பரவியதை அடுத்து District Line நிலக்கீழ் ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது. லண்டன் தென்மேற்குப் பகுதியில் உள்ள பார்சன் கிறீன் நிலக்கீழ் ரயில் நிலையம் தற்போது மூடப்பட்டிருக்கிறது. பெருநகரக் காவல் படையினரும் தீயணைப்புப் படையினரும் அங்கு குவிக்கப்படுள்ளனர்.

Post a Comment