நாட்டின் சில பாகங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும்.
இதனுடன் காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வீசக்கூடும் என்பதால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையுடம் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.
இந்த மழையுடனான காலநிலை எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என காலநிலை அவதான நிலையத்தின் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment