கல்வித்துறைக்கான கோரிக்கைகள் மற்றும் கல்வித் துறையில் முகம்கொடுக்க நேர்ந்துள்ள பிரச்சினைகள் குறித்து கண்காணிப்பதற்காக ஆணைக்குழுவொன்றை நிறுவுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 66 பேரால் கையொப்பமிடப்பட்ட மனுவொன்றின் மூலம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைகளை தாம் முற்று முழுதாக நிராகரிப்பதாகவும் உயர்கல்வியை தனியார் மயப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அந்த விரிவுரையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment