சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலர் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானம்.

பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

இன்று நள்ளிரவிற்கு பின்னர் தேசிய அரசாங்கத்தில் வகித்த சகல பதவிகளில் இருந்து தாம் விலகவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதா இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget