2014 ஆம் ஆண்டு 39 மில்லியன் ரூபாய் சதொச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தி கெரம் மட்டும் சதுரங்க விளையாட்டு பலகைகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று(16) காலை காவல்துறை நிதிமோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
இதன் போது முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே காவல்துறை நிதிமோசடி விசாரணை பிரிவினால் முதலில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 35 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும், 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் அடிப்படையிலும் பிணையில் இன்று(16) பிற்பகல் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
மேலும் சந்தேகநபரான முன்னாள் அமைச்சருக்கு வௌிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்தோடு அவரின் வௌிநாட்டு கடவுச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
எவ்வாறாயினும் அவர் கடவுச்சீட்டை வேறொரு வழக்கிற்காக நீதிமன்றிற்கு வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் கோட்டை நீதிமன்றில் கடவுச்சீட்டை ஒப்படைக்க முடியாமல் போனது.
இதையடுத்து பிணை நிபந்தனைகளில் ஒன்றான அவரின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க தவறியுள்ளதை தொடர்ந்து அவர் மீண்டும் இன்று(16) பிற்பகல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை வழக்கு எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment