பிணை நிபந்தனையை நிறைவேற்றியதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றால் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இன்று முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் பிரசன்னமாகிய அவர், பிணை நிபந்தனையை நிறைவேற்றினார்.
அரசாங்க பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி கரம் பலகை மற்றும் டாம் பலகை என்பனவற்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக நேற்றைய தினம் அவர் காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையானபோது கைதுசெய்யப்பட்டார்.
இதையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றால் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த போத நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, தமது வெளிநாட்டு பயண அனுமதிப் பத்திரம் தொடர்பான சாட்சியத்தை முன்வைக்க தவறியமை காரணமாக அவர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பிரிதொரு வழக்கில் அவரது கடவுச் சீட்டு கொழும்பு மேல்நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும்.
இந்தநிலையில் இன்று அவரது வெளிநாட்டு கடவுச் சீட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமைக்கா ஆவணத்தை காண்பித்ததை அடுத்து அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
Post a Comment