எரிபொருள் விலை - இறுதி முடிவு ஜனாதிபதி கையில்.

எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் இறுதி முடிவை ஜனாதிபதி மற்றும் பிரதமரே எடுப்பார்கள் என, கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அந்த அமைச்சில் நேற்று(19) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு தொடர்பிலேயே இன்று அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, அது குறித்து நிறுவனங்களின் பிரதானிகள் நிதியமைச்சுடன் கலந்துரையாடிவருவதுடன், யோசனைகளையும் முன்வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், விலையை அதிகரிப்பதா? இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரே இறுதி முடிவை எடுப்பார்கள் என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget