ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
லண்டனில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார்.
இந்த மாநாடு நடைபெறும் பிரதான கட்டிடத்துக்கு முன்பாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment