நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிறைவு பெற்றதன் பின்னர் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அமைய கட்சியின் பொறுப்புக்களை புதிய குழுவிற்கு ஒப்படைத்து தேவையான மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை முழுமையாக மறுசீரமைத்து எதிர்வரும் மாகாண சபை தேர்தல் மற்றும் மற்றைய தேர்தல்களில், மிகவும் வலிமையான கட்சியாக முன்னிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment