பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்குவதா? எதிர்ப்புத் தெரிவிப்பதா? என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய கூட்டம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இன்று மாலை பல மணி நேரம் நடைபெற்ற அக்கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்தில் இறுதித் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படவில்லையெனவும், நாளை (04) காலை வரையில் இறுதி தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பல கருத்துக்கள் நிலவுவது தீர்மானம் ஒன்று வருவதற்கு தடையாகவுள்ளதாகவும் அப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment