எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது.

எரிபொருள் விலையை அதிகரிக்க யோசனையில்லை என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளார்.

நேற்று(24) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர்கள் சிலர் வினவிய போதே அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில் இயங்கினாலும் தற்பொழுது விலையை அதிகரித்து மக்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த எண்ணம் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் விலை தொடர்பில் விலை சூத்திரம் ஒன்று முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும் நேற்று(24) இடம்பெற்ற அமைச்சரவைக்கு அவ்வாறான விலை சூத்திரமொன்று முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget