உலகில் அதிக வயது முதிர்ந்த பெண் ஜப்பானில் காலமானார்

ஜப்பானைச் சேர்ந்த உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண்மணியொருவர், தனது 117ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படும் வயது முதிர்ந்த நபி தஜிமா எனும் இப்பெண்மணி 1900 ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி பிறந்ததுடன், கிக்காய் நகரில் வாழ்ந்து வந்துள்ளார்.



இந்நிலையில், சுகவீனம் காரணமாக கடந்த ஜனவரி முதல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர், சிகிச்சை பயனின்றி நேற்று (சனிக்கிழமை) காலமாகியதாக, அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண்மணியென, உலக சாதனைகளைப் பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்திலும் இவர் இடம்பிடித்துள்ளார்.

மேலும், இவரது மகன்கள் மற்றும் மகள்கள் மூலமாக இவருக்கு 160 வாரிசுகள் உள்ளனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget