இன்று மாலை கம்பளையை உலுக்கிய கோர விபத்து!! மூவர் பலி

கம்பளை - தொழுவ வீதியின் துன்தெனிய சந்தியில் உள்ள கால்வாய் ஒன்றில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று மாலை 4.50 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கம்பளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு கால்வாய் ஒன்றில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 82, 74 மற்றும் 72 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வரகாபொல, மெதிரிகிரிய மற்றும் கம்பளை பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget