Update: பொருளாதார நெருக்கடியால் மகள், மகனுடன் தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை: கண்டியில் சம்பவம்

கண்டி – ரஜவெல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்து எரிகாயங்களுடன் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நபர் ஒருவரும் அவரின் மகளும் மகனுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மெனிகின்ன பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று காலை 7.30 மணியளவில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அயலவர் ஒருவரே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

37 வயதான தந்தையும் அவரின் 13 வயது மகளும் 5 வயது மகனுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தந்தையே தீ வைத்து பிள்ளைகளைக்கொன்று தானும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget