ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறை இன்று மாலை சவூதி அரேபியா,கடார் ஜப்பான்,பிலிப்பைன்ஸ் ,சிங்கப்பூர்,ஓமான்,மலேசியா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தென்படவில்லை.
எனவே ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து; புனித ரமழான் எதிர்வரும் வியாழக்கிழமை(17) அன்று ஆரம்பமாகும் என்று அந் நாடுகள் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை, இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் நாளை(16) மாலை பிறை பார்க்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment