கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகமவிடம் நேற்று 12 மணி நேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
திகன, தெல்தெனிய மற்றும் கண்டியின் ஏனைய சிலப்பாகங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் அவர் நேற்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்படி அவரிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலதிக விசாரணைக்காக அவரது கைப்பேசி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டிருப்பதா விசாரணையின் பின்னர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்ததுடன், 200க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
Post a Comment