வவுனியா சூடுவெந்தபுலவில் தந்தையும் மகனும் சடலமாக மீட்பு.

வவுனியா – சூடுவெந்தபுலவு பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா, பெரியஉலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய எஸ். முஸ்தபா என்பவரும் அவருடைய 15 வயது மகனான எம். சயாஸ் என்பவர்களுடைய சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளத்தின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் மோதியதால் இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா, பெரியஉலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget