கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதியில் இன்று (16) காலை சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று, கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் தீடீரென தீப்பிடித்துக் கொண்டது.
அப்போது முச்சக்கரவண்டியில் பயணித்த ஓட்டுனர் மற்றும் குழந்தை உள்ளிட்ட 5 பேரும் யை எவ்வித தீக்காயங்களும் இன்றி உயிர்தப்பியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment