ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாதத் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று(16) மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
மௌலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், மேமன், ஹனபி பள்ளிவாசல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இம்மாநாட்டில் தலைப்பிறை பற்றி எடுக்கப்படும் ஏகமனதான தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாகவும் ஏனைய ஊடகங்கள் மூலமாகவும் நாட்டு மக்களுக்கு உடனடியாக உத்தியோபூர்வமாக அறிவிக்கப்படும்.
தலைப்பிறை சம்பந்தமான ஊர்ஜிதமற்ற தகவல்களையோ வதந்திகளையோ மக்களுக்கு பகிர்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்கப்படுகின்றனர்.
Post a Comment