நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களில் 2194 குடும்பங்களைச் சேர்ந்த 8690 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் கடும் மழை காரணமாக ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கத்தால் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் மரமொன்று முறிந்து விழுந்ததனூடாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது.
Post a Comment