தற்போது நிலவும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காலி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 742 பேர் மற்றும் களுத்துறை – பேருவளை பிரதேசத்தில் 635 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது.
காலி மாவட்டத்தில் தங்கெதர, கல்வடுகொட, கனம்பிட்டிய, தேத்துகொட, சமகிவத்த, கலேகான சந்தி மற்றும் நுகதுவ உள்ளிட்ட பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, அதிக மழை காரணமாக, அகரபத்தனை – சட்டன் தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பு ஒன்றில் மணல் மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக, அங்கிருந்த 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெளியேற்றப்பட்டவர்கள் தோட்ட பொது நூலகத்தில் பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தத்தில் குறித்த குடியிருப்பில் உள்ள வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
Post a Comment