ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியாவத்தை பலாகுடமாக்க பகுதியில் நான்கு நாட்களுக்கு முன் காணாமல்போன 79 வயதுடைய நபர் ஒருவர் இன்று (14) காலை 10 மணியளவில் அப்பகுதியில் அமைந்துள்ள ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பளை மரியாவத்தை பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.எம்.ஜெயசேன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆற்றில் சடலம் ஒன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த கம்பளை பொலிஸார் குறிப்பிட்ட சடலத்தை மீட்டுள்ளனர்.

நான்கு நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்ற குறித்த நபரை உறவினர்களும், பிரதேசவாசிகளும் தேடியுள்ளனர்.

அதன்பின் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து குறிப்பிட்ட நபர் இன்று இவ்வாறு ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா தற்கொலையா என பல கோணங்களில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget