நாட்டின் பெரும்பாளான பகுதிகளில் இன்றைய தினமும் கடும்மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
அந்த திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையிலான மழை வீச்சி பதிவாகும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் காங்கேசந்துறை முதல் புத்தளம், கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்பில் கடுமையான மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 11 பேர் இதுவரையில் மரணித்துள்ளனர்.
Post a Comment