அதிக மழையுடனான காலநிலை பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் பலி.

தென் மேற்கு பருவபெயர்ச்சியுடன் ஏற்பட்டுள்ள வளிமண்டல தாழ் அமுக்கம் காரணமாக அதிக மழையுடனான காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தாழ்அமுக்க நிலை மேலும் வலுப்படும் பட்சத்தில், தற்போது நிலவும் அசாதாரண காலநிலையின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த காலநிலை காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

மொனராகலையில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, மரம் ஒன்று வீழ்ந்ததில் பெண் ஒருவர் மரணமானார்.

இதேவேளை, பொலனறுவை – வெலிகந்த பகுதியில் உள்ள வயல் நிலமொன்றில் மின்னல் தாக்கி இருவர் பலியானர்.

17 மற்றும் 33 வயதுடைய இருவரே மின்னல் தாக்கத்தில் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget