12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் 138 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
வாழ்கை செலவு குழு மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி தற்போது ஆயிரத்து 676 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வரும் 12.5 கிலோ கிராம் எடையுடைய சமயல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 538 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
Post a Comment