ஒவ்வொரு மாதமும் எரிபொருளின் விலையில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, மாதந்தோறும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (10) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment