இன்று முதல் தொடரூந்து பெட்டியினுள்ளும் தொடரூந்து நிலையங்களிலும் யாசகம் கேட்பவர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடரூந்து மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.
யாசகர்களால் மேற்கொள்ளப்படும் இடையூறுகள் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாடுகளை ஆராயந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
யாசகர்களின் செயற்பாடுகளினால் பயணிகள் அதிக இடையுறுகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இதனை களையும் பொருட்டு இன்றிலிருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
தேவை ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினரின் உதவியை நாடி, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தொடரூந்து மேலதிக பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார்.
Post a Comment