நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை.
அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை நேரத்தில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடியதற்குமான சாத்தியம் அதிகமாக காணப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்னல் தாக்கங்களினாலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment