பௌத்த பின்லாடன் என அழைக்கப்படும் மியன்மாரின் சர்ச்சைக்குரிய பௌத்தமதகுரு அசின் விராதிற்கு எதிராக மியன்மார் பொலிஸார் பிடிவிராந்தை பிறப்பித்துள்ளனர்.
மியன்மாரின் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூகி தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே மியன்மார் பொலிஸார் விராதிற்கு எதிராக பிடிவிராந்தை பிறப்பித்துள்ளனர்
அசின் விராதிற்கு எதிராக தேசதுரோக குற்றச்சாட்டை சுமத்தியுள்ள பொலிஸார் அவர் அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பை தூண்ட முயன்றார் எனவும் தெரிவித்துள்ளனர்.
அசின் விராதுவை தேடும் நடவடிக்கைகளை புதன்கிழமை ஆரம்பித்துள்ள பொலிஸார் மண்டலாய் பகுதியில் அவர் வசிக்கும் பௌத்த மடலாயத்தில் சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment