மஹாசொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரை எதிர்வரும் ஜூன் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் குருணாகல் மற்றும் மினுவாங்கொடை பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், மே மாதம் 14 ஆம் திகதி சந்தேகத்தின் அடிப்படையில், தெல்தெனிய பகுதியில் வைத்து அவசரகால சட்டத்தின் கீழ், அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment