எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் புதிய வான்படைத் தளபதியாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
அதற்கமைய, அவர் இலங்கையின் 17வது விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment