நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 6 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இறுதியாக கொவிட் 19 தொற்றுறுதியான 6 பேரில் 5 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றையவர் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்றுறுதியானவருடன் தொடர்பினை பேணிய ராஜாங்கனை பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்- 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2730 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதியான 678 பேர் நாட்டிலுள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 6 பேர் நேற்றைய தினம் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் கடமைகளில் இருந்து விலகி பொது சுகாதார பரிசோதகர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று 6 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

தமக்கு சட்டரீதியான அதிகாரம் வழங்கப்படும் வரை அந்த போராட்டம் தொடரும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்களின் இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவதற்கு அகில இலங்கை டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய நேற்று முதல் டெங்கு ஒழிப்பு உதவியாளர்களும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இருந்து விலகியுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சுரங்க தர்ஷன தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget