தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் செயற்பட இடமளிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்காக சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதியின் இறுதி தீர்மானத்திற்கு ஏற்ப தாம் செய்யற்படவுள்ளதாகவும், அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களான அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர, எஸ்.பி திஸாநாயக்க, அநுர பியதர்ஷனயாப்பா, சந்திம வீரக்கொடி, சுசில் ப்ரேமஜயன்த, டப்ளியு. டி.ஜே செனவிரத்தன, இராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா மற்றும் டி.பி ஏக்கநாயக்க பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment