தேசிய கொள்கையை உருவாக்கும் நோக்குடன் அரசாங்கம் சிங்கப்பூருடன் மேற்கொள்ளவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்தார்.
இந்த பணிப்புறக்கணிப்பின் போது சகல மருத்துவமனைகளிலும் அவரச சிகிச்சை பிரிவு செயற்படும், அத்துடன், சிறுவர், தாய்சேய் மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் மருந்துவமனைகள் என்பனவற்றின் செயற்பாடுகள் தடையின்றி இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக மக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் கிஷாந்த தசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment