அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, பஸ் கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
வருடாந்த கட்டண அதிகரிப்பையும் இணைத்து இந்த 10 வீத அதிகரிப்பு தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதோ வேளை பஸ் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து பஸ் கட்டணங்களை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது பற்றி எதிர்வரும் திங்கட்கிழமை ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment