வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில்,
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன், இதுவரை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட அண்ணலிங்கம் பிரேம்சங்கர் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய பாலேந்திரன் சசிமகேந்திரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்றாம் இலக்க நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றங்களுக்கமைய, நீதிபதி மொஹமட் அப்துல்லாஹ் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் குடியியல் நியாயாதிக்க நீதிபதியாகவும் கடமையாற்றுவார்.
Post a Comment