தற்போது நாட்டின் பாரம்பரிய கலாசார சீர்கேட்டிற்கு போதைப்பொருள் பாவனையே பிரதான காரணமாகவுள்ளது. இதனால் எதிர்கால தலைமுறையினரது வாழ்க்கையும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பாரிய போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டு சிறையிலுள்ள கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கும் தீர்ப்பு ஆவணத்தில் ஜனாதிபதி கைசாத்திடுவதாக குறிப்பிட்டுள்ளமையானது வரவேற்க்கத்தக்க விடயமாகும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கொலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து மரண தண்டனை விடயத்தில் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன ஒருபோதும் பின்வாங்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.
Post a Comment